Pages

Monday, February 10, 2014

அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு அதே தான் !!

நான் பாடுறேன், நீ தூங்குடா கண்ணா என்று ஏதோ ஒரு மொழிலே
தன் செல்லக்குழந்தையை பாடி தூங்கவைக்க
எல்லாம்  அம்மாவும் நினைக்கிறாங்க . ஆனா எல்லாம் தூங்குதா என்ன !!




இந்த குழந்தை மனதில் என்னவெல்லாம் தோன்றும் ?

சிரிக்கிறது என்றால் ரோஜா வருமோ ?
அழறது என்றால் சிங்கம் வருமோ ??

அம்மாவின் பாட்டுக்கு என்னவா எக்ஸ்ப்ரெஷன் தருது !!  அதன் ஒவ்வொரு சினுங்கல் நம்மை என்னவெல்லாம் செய்கிறது !!

அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே

அம்மாக்கள்  தங்கத் தமிழ் நாட்டிலே பாடுகிறோம்.

ஆராரோ ஆரியராரோ அம்புலிக்கு நீ 
அப்பாக்களும்  அப்பப்ப பாடுகிறோம் இல்லையா ?

அன்னிக்கு பேரனை தூங்க வைக்கும் பொறுப்பு   டர்ன் சட்டப்படி தர்மப்படி  என்னோடது.

அதனாலே பேரனை தூளி லே போட்டு,  தயார் செய்யும்பொழுது

புதுசா எதுன்னாச்சும் பாடுங்க
அப்படின்னு கிழவியோட கமாண்ட் வேற.
பெட்டர் ஹாப் கொடுமை இந்த 73 வயசுலேயுமா !!
தாங்கலேடா சாமி.

அத அப்பறம் பார்ப்போம்.
இப்ப குழந்தை தூங்கணும் . நம்ம பொறுப்பு இல்லையா..

இங்கே அங்கே எங்கேயும்
இப்புவியில் இருக்கும் அஞ்சு  கண்டங்களிலும்
அன்னை தன் செல்லக் குழந்தையை என்ன பாட்டு பாடி
தூங்க செய்கிறாள் ?
அது மாதிரி ஒரு டிராக் லே போவோம் .

கூகிள் ஆண்டவா துணை என்று பிரார்த்திக்கொண்டு
முதலில் ஜப்பானுக்கு சென்றேன்.

lullaby
ஜப்பானில் டாகேடா .

வேலைக்கு இருக்கும் ஒரு சிறிய பெண் எஜமானியின் குழந்தையை முதுகில் சுமந்தபடி வேலை செய்கிறாள். தன் மனக் கவலைகள் எல்லாத்தையும் இந்த கவிதையில் கொட்டித் தீர்க்கிறாள்.



ஆபிரிக்கா என்றாலே எனக்கு ட்ரம்ஸ் தான் நினைவுக்கு வரும்.
அங்கே ஒரு கிளாசிகல் சௌன்ட் இருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
ஆப்பிரிக்கா நாட்டில் என்ன மாதிரி ஒரு வாத்சல்யம். !!
african lullaby




பிரெஞ்சு நாட்டில் பாரீசில் ஒரு அம்மாவுக்காக அதன் பாட்டி பாடுகிறாள்.
இந்த அம்மாக்களுக்கு மட்டும் அவங்களோட அம்மா இருந்துவிட்டால் கவலையே இல்லை. குழந்தையைப் பத்தி தொண்ணூறு பங்கு அவங்க கிட்ட கொடுத்துட்டு, அப்பாடி ரொம்ப டயர்டு என்று படுத்துக்கொண்டு விடுவார்கள். 
பிரான்ஸ் லேயும் அதே கதி தான். 
பாவம் பாட்டி மா.


 +Ananya Mahadevan        

  நான் சொல்றதை  அனன்யா மேடம் ஒத்துப்பாங்களா அப்படின்னு பொருத்துதான் பார்க்கணும். பழனி லேந்து வீபூதி வந்திருக்கு அப்படின்னு நீங்க எழுதியது படிச்சேன். சமயத்திலே வந்திருக்கே. .கொஞ்சம் வீபுதி தாங்க மேடம். குழந்தைக்கு இட்டு விடறேன். முருகா காப்பாத்து. இன்னிக்காவது நேரத்துக்கு தூங்க வை. 


French Lullaby பாடிப் பார்ப்போம்.

LET US RELAXA



ஊஹீம். நத்திங் டூஇங்க்
எனக்கு வேற பாட்டு பாடு அப்படிங்கறது செல்லம்.
SOUTH AMERICAN LULLABY இருக்காமே. அதை பாடுங்க என்று சொல்றா  கிழவி.

மெக்சிகோ நாட்டில் தாலாட்டு எப்படி அதையும் கேட்போம்.


Arriba del cielo hicieron tamales
Arriba del cielo hicieron tamales
Lo supo San Pedro y mandó a traer los reales
Lo supo San Pedro y mandó a traer los reales

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

Duermete niñito que tengo que hacer
Duermete niñito que tengo que hacer
Lavar tus pañales, y ponerme a coser
Lavar tus pañales, y ponerme a coser

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

ஏங்க  பையன் ஊருக்கு போய்விட்டு வந்தப்போ நம்ம ஒரு அரபியன் தாலாட்டு கேட்டோமே நினைவு இருக்கா ?

அதை பாடச் சொல்றியா.  சரி பாடறேன் என்று ஆரம்பித்தேன்.

ARABIAN LULLABY அரபு நாட்டில் தாலாட்டு. 



எனக்கு தூக்கம் அசத்துகிறது. பேரன் தூங்கவில்லை.
இந்த லல்லபி பாடுவோம். அந்த லல்லபி பாடுவோம் அப்படின்னு
பாடினால்
பாருடா...
இந்த கிழவி தான் தூங்கறா ..என்னமா குறட்டை விட்டுண்டு.


கடைசியா இத டிரை பண்ணுவோம்.
INDIAN LULLABY
ஓமனத் திங்கள் கடவோ .. அந்த
சின்னக் குயில் சித்ரா குரலில் என்ன மாயமோ !!




பாம்பே ஜெயஸ்ரீ
மன்னுபுகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே 

தாமரைக் கண்ணனாம் உரங்கீனம் சித்ரா பாடுவாளே அது ?

என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை.

அடுத்தது என்ன செய்யறது புரியல்ல.
மணி ஆல்ரெடி 1 ஆயிடுத்து.
இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
எழுந்து கிழவிக்கு காபி போட்டு தரனும்.

பேராண்டி, !!!
என் செல்லப்பேரன் கடைசியில் இந்தப்பாட்டுக்குத்தான் தூங்குவானோ !!
உங்க ஆத்தாவுக்கு  அந்தக் காலத்துலே இதாண்டா பாடினேன். என்று துவங்கினேன்.




ஊஹூம்.  தூளி லே எழுந்துண்டு உட்கார்ந்து
கண் கொட்ட கொட்ட இன்னும்.. என்னை பார்த்து என்ன சிரிப்பு !!
எப்போடா நீ தூங்கப்போறே !!

அத்தை அடிச்சாரோ !! என்று பாட ஆரம்பித்தேன்.

  'இன்னும் நீ பாடினேன்னா நானே உன்னை அடிச்சுடுவேன். 
நீ படு.. எனக்குத் தூக்கம் வரும்போது தூங்குவேன்.            '


அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு தாலாட்டு அதே பாட்டு தான்

படும் பாடும் அதே தான்.

நீங்க படுங்க.. அவன் தூக்கம் வந்தா தானா தூங்குவான் என்கிறாள் கிழவி.

அத 10 மணிக்கே சொல்லி இருக்கலாம் இல்லையா...




13 comments:

  1. பாம்பே ஜெயஸ்ரீ பாடல் அற்புதம். மற்ற பாடல்கள் அப்புறம்தான் கேட்கணும். எவளவு பாடல்கள்! இதே பாடலை பி வி ராமன்-பி வி லக்ஷ்மணன் குரல்களில் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  2. என்ன தான் பல காணொளிகள் இருந்தாலும், நம்ம பாட்டை கேட்டாலே கண்கள் கலங்கி விடும்...

    இத்தனை காணொளிகளை தேடி பகிர்ந்து கொள்ள 1 மணி ஆகாதா...? அதிகாலை 4 மணிக்கு தூக்கம் தள்ளுமே...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. தங்களை நேற்று மாலை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தபோது இதே தகவலைக் கூறினீர்கள். அற்புதமான தொகுப்பு. (தாத்தாவுக்குத்தான் பேரக்குழந்தைகள் மீது எத்தனை பாசம், பரிவு! இல்லையென்றால் ஐந்து கண்டங்கள் சுற்றிவந்து இந்த அழகிய தொகுப்பைத் தந்திருப்பாரா?)

    ReplyDelete
  4. அஞ்சு கண்டத்திலேயும் போய்
    அஞ்சாமல் பாடல்கள் திரட்டி
    அம்மாவின் பாடல்களை
    அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. ஹாஹாஅஹா சிரித்து சிரித்து....தாத்தா.....ஆமாம் அதெப்படி நம் பாரம்பரிய தாலாட்டிற்குமா பேரன் உறங்க வில்லை.!!!!!!! ஆச்சரியம்....ஆனால் சிரிப்பினூடே சிறந்த நல்ல லுல்லுபிஸ் பகிர்தல்! தாத்தா எப்படி இத்தனையும் கண்டு போட்டீர்கள்! நல்ல இசை ரசனை!

    சரி கடைசியில் உங்களை எந்தத் தாலாட்டு தூங்க வைத்தது!!!!

    இந்த வ்யதிலும் நகைச் சுவையில் கலக்குவது அருமை! வயது தடை அல்ல ரசனைக்கு என்பது தெளிவாகிறது!

    துளசிதரன், கீதா (thillaiakathu chronicles)

    ReplyDelete
  6. B.V.raaman, B.V. lakshman
    மன்னுபுகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே சௌராஷ்டிர ராகத்தில் ஆரம்பித்து ராக மாலிகையாக வரும் இந்த ஆழ்வார் பாசுரம்....இவர்கள் அருமையாகப் பாடியிருப்பர்கள்!

    ReplyDelete
  7. Sorry thathaa அந்தப் பாட்டு சொராஸ்டிரம் இல்லை.....அது வேறு அவர்கலது பாட்டி கேட்டுக் கொண்டே உங்கலுக்குப் பின்னூட்டம் இட்டதில் தவறாகி விட்டது......

    ReplyDelete
    Replies
    1. அது இருக்கட்டும்.
      நீங்கள் நேற்று குறிப்பிட்ட ராகம் ராமபிரியா
      ஜன்ய ராகம் ராம மனோஹரி 52 வது மேளம்.

      இதில் சில பாடல்கள் கோடீஸ்வர ஐயர் இயற்றியது இருக்கின்றன.

      சினிமா சங்கீதத்தில் இதுவரை யாரும் கையாண்டதாக தெரியவில்லை.

      கஜானனம் என்று ஒரு பாடல் யேசுதாஸ் பாடுகிறார்.

      அற்புதம்.

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      Delete
  8. அருமையான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
  9. நல்ல பதிவு

    தூக்கம் வாரவில்லை
    தூக்கம் விரட்டுகின்றன...
    கவிதைகள்..
    அருமை..

    ReplyDelete
  10. அந்தப் பாடல் எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. சினிமா மோக முள். இசை இளையராஜா.....பாடியவர் ஜேசுதாஸ். பாடல்: கமலம் பாத கமலம்.....

    https://www.youtube.com/watch?v=d4Im4_Pc-y0

    ReplyDelete
  11. இவ்வாறாகத் தொகுத்துக் கொணர்ந்து பகிர்வதற்கு பெருமுயற்சி தேவை. தாங்கள் அதனைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!