Pages

Saturday, June 15, 2013

ஊரை தெரிஞ்சுகிட்டேன்.

  நேற்று நல்ல மழை . 
காலையில் துவரம்பருப்பு வாங்க வேண்டும் என்று  சொன்னார்கள் .  அதுக்கென்ன, போனை எடுத்து அம்பிகாவுக்கு சொன்னால் அதைக் கொண்டு வந்து தந்துவிடுவார்களே என்றேன்.
அதெல்லாம் இந்தியாவிலே .  இங்கே குறைந்த பட்சம் 100 டாலர் சாமான் வாங்க வேண்டும். டெலிவரி சார்ஜஸ் டாலர் 25.  அதுவும் அடுத்த நாள் தான் கிடைக்கும். இப்ப எனக்கு சாம்பார் பண்ண பருப்பு வேண்டுமே. என்றால்.
இன்றைக்கு மட்டும் சாம்பார் இல்லாத சாதம் சாப்பிட்டா என்ன? என்று கேட்பதற்குள் என்னையும் உள்ளே தூக்கி போட்டுகொண்டு காரை கிளப்பி விட்டாள் என் பெண்.

மேகங்கள் எங்கே பார்த்தாலும் இருட்டிண்டு வரது.
மேகமே மேகமே.. அப்படின்னு வாணி ஜெயராம் பாடியது இருக்கா அப்படின்னேன்.
அதெல்லாம் தெரியாது.

.மேகம் மே கம் ஆர் மே நாட்   கம்.
 But  துவbம்பருப்பு இல்லை அப்படின்னா சாம்பார் வில் நாட் கம்.

அதற்காகத்தான் போறோம் என்றாள்  பெண்.



இந்தியன் என்று போர்டு போட்டு இருந்தது. அமெரிக்காவிலே இந்தியனா ? 
கொஞ்சம் தயங்கி தயங்கி உள்ளே போனேன்.
கமல் ஹாசன் இருப்பாரோ என்று பார்த்தேன்.அவரைக்காணோம்.

பேரு தான் இந்தியன். உள்ளே இந்திய சூழ் நிலை இல்லை.


  எல்லா மளிகை சாமான்களும் இருந்தன. தயிர்,பால், மோர் , , ப்ரெட், சப்பாத்தி ரெடி மேட, தோசை ரெடி மேட் , உப்புமா ரெடி மேட்   எல்லாமே இருந்தன. எல்லாமே Freezing point பிரீச்டு . வீட்டுக்கு போய் ஒரு 25 வினாடி ஓவனில் சூடு பண்ணினால் போதும் என்றாள் என் பெண்.

வாங்கிகொண்டு வீட்டுக்கு போகும்போது மழை இல்லை.

   இது spring season. ஸ்ப்ரிங்காம். வசந்த காலம்.

   இது மழையுடன் துவங்குமாம். ஆனால் திடீர் திடீர் என்று மழை வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் பளீர் என்று வெய்யில் அடிக்கிறது.  இதமான வெய்யில். 
இந்த அனுபவமே புதுமை.
அனுபவம் புதுமை. 

 ஆஹா... வாசலிலே சென்று பார்த்தேன்.
  
   புதிய வானம் புதிய பூமி.. 

   என்று பாடல் நினைவுக்கு வந்தது.

 கொஞ்ச  நேரம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ரோடுகளில் உலாத்தினேன்.

மழை மறுபடியும்.

குடையுடன் ஒரு குட்டையான கரிய உருவம் இன்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. 
   
   மழை பெய்யறது.  உள்ளே வாங்க என்றது  ஒரு குரல்.
ஏதோ கேட்ட மாதிரி இருக்கே, அப்படின்னு நினைசுகிட்டு,
 நீங்க யாரு ?அப்படின்னேன்.

நான் யாரா ? அந்த அளவுக்கு போயிடுத்தா?
சத்தம் பலமானது
 தண்டர் ஸ்டார்ம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களாம்.
 மிக அருகாமையில் கேட்டது.

   அடே !  நீயா ?  என்றேன்.
என்ன நீயா நானா ? என்று முரண்டாள்
. செகட்டு மேனிக்கு மழை கொட்டறது.
வீட்டுக்கு உள்ள போங்க என்று விரட்டினாள்.
..
   வானம் பொழிகிறது. பூமி நனைகிறது .

   நானும் நனைகிறேன். உனக்கென்ன கஷ்டம் என்று விளாசினேன்.

   அது சரி. உங்களுக்கு தும்மல், இருமல், காய்ச்சல் இன்று வந்தால்... ?
  என்று இழுத்தாள் இவள்.

   வந்தால்...... என்ன ? என்று கேட்பது போல் அவளை ஒரு நரசிம்ம அவதார பார்வை பார்த்தேன்.

   எனக்கு யார் காலைலே எழுந்துண்டு காஃபி போட்டுத் தருவாக... அப்படின்னாள்.

   அடி, தங்கமே...ஞானத் தங்கமே....
   உன்னோட புத்திசாலித்தனம் எனக்கு எழுபது வயசாகியும் வல்லையே....

   என நினைத்தேன். இவளையும் கொஞ்சம் மழையில் நனைத்தால் என்ன என்று தோன்றியது.

   வேண்டாம். இவளுக்கு ஆஸ்த்மா,கர் கர் என்று வந்துவிடும்.

   அப்பறம் , Doctorஅப்பாயின்ட்மென்ட்,insurance  என்று ஓடவேண்டியிருக்கும்.

   மாந்துறையானே...காப்பத்துப்பா...

   மேனகாவைக் காப்பாத்துப்பா
என்று மனசிலே ஒரு பிரார்த்தனை செய்துகொண்டேன்.

   அது யார் மேனகா என்கிறீர்களா ?
 
   மேனகா என்பது enga  ஊட்டு எசமானி மீனாட்சி பாட்டியின் செல்லப்பெயர் அவுக அப்பா வச்சது.

   அந்தக் காலத்துலே மேனகா என்று ஒரு படம் வந்ததாம். அதப்பார்த்து அவுக அப்பா அப்படியே    அந்த மேனகை character attracted him so much சொக்கிப்போய்விட்டாராம். அன்னிக்கு அவர் படம் பார்த்தன்னிக்கு இவ    புறந்த செய்தி வந்ததாம். அதனாலே மேனகா அப்படின்னு பேர் வச்சாராம்.
Someday she hopes her biography will be flashed in some of the text books of history !! Already she has written a treatise on "On me and my village where I was born " . 

    அப்ப மீனாட்சி என்னு எப்படி ?
    அவரு மதுரையிலே இருந்தாராம்.  அதுனாலே ...

      யார் அந்த மாமனார் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமல் இல்லை.  கொஞ்ச வருசத்துக்கு    முன்னாடி  அந்த deva  லோகத்துக்கு பர்மனன்டா விசா வாங்கிண்டு    போயிட்டார்.    News is that he has since become a citizen there renouncing citizenship here.

Siva Loga naatharai kandu, sevithivom vaareer.     I do not know how many classic lovers would have heard this song.  1942 Film: Nandhanar.  Singer: DHANDAPANI DESIKAR.

   A few years before his voyage, i mean the voyage of my father in law,

 இந்த மேனகையை,  நீ கையை புடிச்சுக்கோ அப்படின்னு என் கையிலே மாங்கல்யம் தந்து நா நே நா கொடுத்துட்டு போயிட்டார்.

   அப்படிப்பட்ட மேனகையை, 

   இன்னிக்கு ஒரு நாள் அந்த கந்தர்வ லோக இந்திரபுரியாம் world, I dont know when we will be able to visit, so, இந்த ஸ்வர்க புரியிலே சவாரி போலாம   அப்படின்னு கேட்டென்.

   எஸ் ஸுனு இங்கிலீஷிலே பதிலினிளாள்.

   நீங்களும் பாருங்க.

   குறிப்பாக, 1.30 முதல்.....

   வருண பகவான் இங்கேயும் இருக்கார்.



No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!