Pages

Monday, June 3, 2013

சொல்லத்தான் நினைக்கிறேன்.



     ரசித்தவை நினைவில் நிற்பவை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

    ரசித்தவைகள் பலவாய் இருக்கும்பொழுது அதுவும் பல விஷயங்களில் இருக்கும்பொழுது, சில அதிலே
    காலப்போக்கில் மறந்து போம். 

    ஆனால், ரசிக்க இயலாதவை, ரசிக்க சகிக்க முடியாதவை பலவும் நினைவில் இருப்பது மட்டுமல்ல,
    அடிக்கடி வந்து தொந்தரவு படுத்துகிறதே !! 



வௌய் திஸ் கொலவெறி டி ?

 ( என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவரில் சிலர் இதுமாதிரியும்
    சொல்கிறார்கள்:  எந்த கண்ட்ராவியை மறக்கணும்னு நினைக்கிறே னோ அது என் கண்முன்னாடியே
    வந்து நிக்கறது ஸார். ) 



    அது ஏன் என எப்பொழுதாவது நினைத்துப்பார்ப்பதுண்டா...

    எதை யாரை மறக்கவேண்டும் என நினைக்கிறோமோ அதுவே அடிக்கடி நினைவில் வந்து போகிறது.

   கடந்து நடந்து முடிந்து போன நிகழ்வுகளிலே பல ...

   இன்ப துன்ப நிகழ்வுகள் மட்டுமல்லாது... 

   நம்மைப்பொறுத்து இல்லாது, நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காத நிகழ்வு ஆக கூட இருக்கலாம்.

   அது என்றோ ஒரு பயணத்தில் நடந்திருக்கலாம், ஒரு விழாவில் நடந்திருக்கலாம். ஒரு கூட்டத்தில்
   ஏன் ஒரு காட்டில் கூட நடந்திருக்கலாம்.

   நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

 அது என்ன அப்படின்னு கூட வேண்டாம்.

   அது ஏன் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க...

*to be continued.

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!