Pages

Tuesday, June 23, 2009

அம்மா எனக்கொரு வரம் வேணும்






அம்மா எனக்கொரு வரம் வேணும் - மறுக்
காமல் நீ அதைத் தர வேணும் - உன்
னடியே கதி என வந்து விட்டேன்
நீதான் அடைக்கலம் தர வேணும்

கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை
மண்ணால் உன்னைச் செய்தாலும்
மாதா உன்னருள் மறைவதில்லை

பளிங்கால் உன்னைச் செய்தாலும் - உனைப்
பற்றிய வரைக்கை விடுவதில்லை
எப்படி உன்னைச் செய்தாலும்
என்அன்னை உன்அன்பில் மாற்றமில்லை

அதுபோல் எனக்குன் பொன்னடியில்
மாறா அன்பைத் தர வேணும்
எது வந்த போதிலும் கலங்காமல்
உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்
--கவிநயா



இந்தப்பதிவுக்குச் சென்ற நான் ஒரு பின்னூட்டம் இட்டேன்.
அது இதுவே.

// கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை //

என்றோ ஒரு நாள் கவிஞர் வாலி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
தங்கள் பாடலைப் படித்தபோது அது நினைவுக்கு வந்தது.

கோவிலுக்குச் சென்றாராம். கர்ப்பக்கிருகத்திற்குள் நுழைந்தாராம்.
கல்லைப்பார்த்து கடவுளென்பாரைக் கூட்டம் கூட்டமாய்க் கண்டாராம்
என்ன இது ! விந்தையென நினைத்தாராம்.
கோவத்தில் கடவுளை நோக்கி ' நீ கல் ! " என்றிரைந்தாராம்.
கணத்திலே எதிரொலி " நீ கல் " எனக் கேட்டதாம்.

அவ்வொரு வார்த்தையில் அவ்வுரு தோன்றிடவே
மெய் சிலிர்க்க, உடல் வியர்க்க‌
நாக்குழற நவின்றாராம் தம் சுற்றத்தாரிடம்.
" நான் சொன்ன 'கல்' பெயர்ச்சொல்.
அவன் சொன்ன ' கல்' வினைச்சொல். "

ஆம்.
கல்லாதவனுக்கு அவன் கல் .
கற்றவனுக்கோ அவன் கடல்
பாற்கடல்.

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!