Pages

Friday, March 21, 2008

இந்த தடவை கிரீடம் யாருக்கு ????


இந்த தடவை கிரீடம் யாருக்கு என்று சொல்லுமுன் ஒரு வார்த்தை:

பதிவுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன். அவை எல்லாவற்றையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு ஒவ்வொரு வாரமும் வருவது இயலாத ஒன்றாகும். ஆகையால், நான் படித்ததற்குள் பிடித்தது, ரசித்தது மட்டுமல்ல, ஒரு பொருளைப் பற்றி மேன்மேலும் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள் பற்றியே இப்பகுதியில் குறிப்பிடுகிறேன். மற்றும் எழுத்து இயல் மட்டுமன்றி இசை, நாட்டியம், ஓவியம், ஆகிய ஏனைய பதிவுகளும் அடங்கும்.

முதலாக, நான் குறிப்பிட விரும்புவது

"அமராவதி ஆத்தங்கரை" தன்னைப் பற்றிய குறிப்பில் இவர் சொல்கிறார்:
"இல்லாத கடவுளுக்கான படையலாய்…எனது கவிதைகள்!" ஒரு புதுக்கவிதை
சற்று முரணாக இருந்தபோதிலும் சிந்திக்க வைக்கிறது.
http://blog.arutperungo/com

இவர் எழுதுகிறார்:” ரோஜாப்பூ மல்லிகையான கதை
ஷேக்ஸ்பியரின் இக்கூற்று ஆங்கிலத்தில் ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்:

What is there in a name? That we call a rose would in any other name,
smell as sweet.

இதோ நேரிசை வெண்பா வடிவத்தில்:

பெயராக எச்சொல்லைப் பெற்றாலும் ஆங்கே
உயர்வேது மப்பொருளுக் குண்டோ? -- மயங்கா
துரைத்திடுவாய் மல்லிகைக் குற்றபெயர் மாறின்
மறைந்திடுமோ வீசும் மணம்? “

Just beautiful.
***************************************************
அடுத்ததாக நாம் காண்பது;
http://lifeexperiencenhospital.blogspot.com/
தனது இலக்கினைக் குறிப்பிடுகையில் இவர் சொல்கிறார்:

LIFE.... "no matter what work you do work to be the best at it"

தன்னை ஒரு மருத்துவராக எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள்:

I am a doctor, dedicated to God and to my patients

ஆசிரியர்களுக்காகவே ஒரு பாடல்,

A POEM FOR TEACHERS
Teachers Paint their minds
And guide their thoughts
Share their achievements and advise their faults
Inspire a Love Of knowledge and truth
As you light the path
Which leads our youth
For our future brightens
With each lesson you teach
Each smile you lengthen
Each goal you help reach
For the dawn of each poet
Each philosopher and king
Begins with a Teacher
And the wisdom they bring.
By Kevin William Huff.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு எல்லாப் பள்ளிகளிலும் இப்பலகை இடம் பெறவேண்டும்.
**************************** ****************

அடுத்து நாம் பார்க்கப்போவது,

செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறியவேண்டிய தகவல்கள் எல்லாமே இவர் பதிவினில் உள்ளன. பல வரை படங்கள், நாசா மைய நிழற்படங்கள் உள்ளிட்ட இவர் பதிவு ஒரு பொக்கிஷம்.
http://jayabarathan.wordpress.com/
"செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது.
செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது"

இவர் சொல்வதைப் பார்த்தால் நமது பூமியும் ஏதோ ஒரு எதிர்காலத்தில் செவ்வாய் போல ஆவது சாத்தியமே. (possibly in 2000000 A.D.) To my query whether there exists such a possibility, he replies, "பூமிக்கு என்ன கேடுகள் இயற்கையால் விளையும் என்று கற்பனை செய்ய இயலாது. தென்னாசியை நாடுகளைக் தாக்கிய கோரச் சுனாமி போல் இயற்கையின் சீற்றங்கள் எழலாம். 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியில் வீழ்ந்து ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து டைனசாரஸ்களும் அழிந்து போயின."
***************************************
*************************************
தமிழ்ப் பதிவு உலகத்தில் போட்டோ போட்டி நடத்தும் மற்றும் அதில் பங்கு பெறும் யாவரும் கண்டு களிக்கவேண்டிய இடம் இதுவே:
http://www.nature.org/?src=t1
"These snakes are incredible swimmers, and given that we have found six 7-foot snakes within a two-month period .....

ஒரு சிறிய கதை படிப்போமா ?
http://athisha.blogspot.com/
ஜென் துறவி ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்ட அரசன், துறவியை நோக்கி "உன்க்கு இன்னமும் 24 மணி நேரம்தான் இருக்கிறது,நீ அதை எப்படி வாழ விரும்புகிறாய் ? " என கேட்டான். துறவி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வது போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது , எனவே எனக்கு 24 மணி நேரமும் 24 வருடமும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.
************
*********
******
****
Next …paraak..paraak..
http://thulasidhalam.blogspot.com

As usual,
மேடம் துளசி அம்மா தான் as usual நல்ல கதை சொல்லுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் ஏதோ அனாடமி professor போல ஆபரேஷன் appraisal செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு earlier பதிவிலே தான் ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போய் வந்த கதையை சொல்லுகிறார். தான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். பின்னூட்டங்களுக்கு அவர் போடும் பதிலிருந்துதான் அவர் என்ன நினைத்தார் எனத் தெரிகிறது.

சொல்லாத சொல்லுக்குச் சொல்லிய சொல்லைவிட பன்மதிப்பு உண்டு என சொல்வார்கள்.

அது அவர் பதிவினைப் படித்தாலே தெரியும். Among blogs, hers is Dhruva Star.
*****************************
NEXT
இது முதல் தடவையாக நான் கண்ட பதிவு. தான் படித்து ரசித்த பதிவுகளுக்கான சுட்டி தருகிறார்.
http://padiththavai.blogspot.com/" தம்பதியராகி இன்பமாக வாழ்ந்தவர் ஏன் பிரிகிறார்கள்" என்ற உள இயல் ரீதியான ஒரு விளக்கம்தனை ஒரு மன நிலை மருத்துவர் (ஐரோப்பியர்) தருகிறார். இப் பதிவுக்கான சுட்டி தந்திருக்கிறார்.
சற்று controversial ஆக இருக்கிறது. இருப்பினும் படிக்கத்தகுந்தது.

இதைவிட இந்தப் பதிவாளர் 2005 ம் வருடத்திலே "பணம், பணம் அறிய அவா" என்று எழுதியிருக்கிறார் பாருங்கள் ! அயல் நாடுகளில் உழைத்து ஓடாய்ப்போய் பாசத்துக்கும் பரிவுக்கும் ஆசைப்படும் ஒருவர் வேதனையுடன் என்ன எழுதுகிறார் : "ஒவ்வொரு முறையும் நலம் நலமறிய அவா என்றுதான் கடிதம் எழுதுகிறோம்! பணம் பணமறிய அவா என்றல்லவா பதில் வருகிறது! நமக்கு மட்டும் ஏன் பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?"

உண்மை கசப்பு என்பார்கள். அது உண்மையே.
******************************

படிப்போரது பொறுமை எல்லை தாண்டுமுன்னே நான் முடித்துக்கொள்ளவேண்டும்.

இத்தனை வலைப்பதிவுகளையும் சுற்றிவிட்டு வந்தபோது கண்ணில் பட்டது ஒரு
பெட்டகம்
http://pettagam.blogspot.com/
இந்தப் பெட்டகத்தினைத் திறந்தால் ஒரு வினா ..

ஆக்கபூர்வமாக எதையும் செய்யாது, எதை எடுத்தாலும் தான் செய்தது தான் சரி எனச்சொல்லி பிடிவாதமாக இருந்த ஒரு போக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறி மாற்றான் கருத்துக்கு மதிப்பு தர துவங்கியிருக்கிறது. இது எங்கே போகிறது?

"ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன."

அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்."

அர்த்தமுள்ள வலைப்பதிவுகளில் இதற்குத்தான் பரிசளிக்கவேண்டும் என நான் நினைக்கத்துவங்கிய போது கண்ணில் பட்டது.
http://kouthami.blogspot.com/
"கண்மணி பக்கம் அ முதல் ஃ வரை பேசுவோம்"
எனும் தலைப்பில் எழுதும் இவர், தன்னைப் பற்றி எழுதுகிறார்:"

நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா "

இவர் கேட்கும் கேள்வி:

"ஒரே ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் கேள் னு நேர்ல வந்து கடவுள் கேட்டா நாம என்ன கேட்போம் ? "

அதுவும் அது தனக்காக இல்லாமல், பிறருக்காக இருக்கவேண்டுமாம்.
இந்த சிந்தனை எனக்கு மன நிறைவினைத் தந்தது எனச் சொன்னால் மிகையாகாது. தனக்கு என்ன இல்லை என நினைத்து நினைத்து அந்த நினைப்பிலேயே வாடி வதங்கி வேதனையும், பொறாமையும், கோபமும், நிறைந்த ஒரு மனித சமுதாயத்திடம் இவர் என்ன கேட்கிறார் பாருங்கள் : பிறருக்கு என்ன வேண்டும் என ஒரு கணமாவது நாம் நினைத்துப் பார்க்கிறோமா ? நாம் வாழ்கின்ற அளவிற்குக் கூட வாழ இயலாதவர்தம் துயர் துடைக்க நாம் என்ன செய்கிறோம் ? செய்யப்போகிறோம் ? அவர்கட்காக ஒரு சொட்டு கண்ணீர் ! அவர்கள் பொருட்டு ஒரு பிரார்த்தனை ! அவர்களுக்காக கடவுளிடம் ஒரு வரம் !

மேடம் ! நீங்க எங்கேயோ போயிட்டீங்க !! மனித நேயத்தின் உச்சிதனைத் தொட்டிருக்கிறீர்கள்
.
தனிமனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
இல்லாமை என்பது இல்லாமையாகவேண்டும் என நினைத்திருக்கிறீர்கள். மனித நேயத்தின் முதல் வெற்றி இதுவே. உங்கள் குரல் உலகெலாம் எதிரொலிக்கட்டும்!

வாருங்கள் !! இந்த வாரம் தங்க கிரீடம் தங்களுக்கே !


Congratulations.

Come on Friends! Let us all give a BIG clap.

9 comments:

  1. சூரி அய்யா!
    இதென்ன இப்படியெல்லாம் செய்து சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள்.கிரீடம் கிடைக்கும்னோ பரிசு கிடைக்கும்னோ நம்மில் யாரும் வலை பதிவதில்லை.
    பதிவுகளில் அவரவர் மனப்பாங்கு சுதந்திரமாக வெளிப்படுகிறது.வெளிப்படுத்தும் இடமாக வலை அமைந்து விட்டது.

    கண்ணதாசன் சொல்லுவார்...
    ''உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு''

    ஆனால் அப்படி பட்டவர்களைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் தாண்டி கடவுளே இவர்கள் ஏன் கஷ்டப் படுகிறார்கள் உன் படைப்பில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்னு மனம் கசியும்.அப்படியொரு தருணத்தில் பொறியாக விழுந்ததுதான் அந்தப் பதிவுக்கான தலைப்பு....
    ஆனால் பேசவும் எழுதவும் மட்டுமே நம்மால் முடிகிறது செயல் படுத்தும் சக்தி யாரிடம் ....???
    இருந்தாலும் உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்கி ஏற்கிறேன்...

    நன்றி!நன்றி!!நன்றி!!!!!!

    ReplyDelete
  2. இப்படியும் பதிவுகள் போடுவேன்.கும்மியும் அடிப்பேன் கண்டுக்காதீங்க:)))

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கண்மணி..

    சூரி அவர்களே,

    என் பதிவையும் பரிசீலனை செய்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  4. // கண்மணி said...
    சூரி அய்யா!
    இதென்ன இப்படியெல்லாம் செய்து சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள்.கிரீடம் கிடைக்கும்னோ பரிசு கிடைக்கும்னோ நம்மில் யாரும் வலை பதிவதில்லை//
    மேடம் ! இது ஒரு பெரிய அங்கீகாரம் அல்ல. தங்களைச் சங்கடத்திற்கு
    உட்படுத்தியதற்காக மன்னித்தருள வேண்டுகிறேன். உண்மையில் வலைப்பதிவுகளில்
    மனித நேயக்கருத்துக்கள் காணப்படுகையில் அவற்றினை எழுதியவர்பால் ஒரு
    நன்றி உணர்வு என் மனதில் தோன்றுகிறது. இது சமுதாயத்திற்கு நாம் செய்யும் சிறிய மானிடத் தொண்டு. பாரதி சொன்னது போல : ஒரு நல்ல காரியம் நடக்கிறது எனின்: நிதி மிகுந்தவர் பொற்கிழி தாரீர். அதுவும் அற்றவர் வாய்ச்சொல்லில் அருளீர் என்றார் அல்லவா ? இது போன்ற கருத்துக்கள் வலைப்பதிவுகளில் இன்னமும் சொல்லப்படவேண்டும் என்பதற்காக எழுதும் பதிவாளர்களை உற்சாகப்படுத்தும் என நினைத்து செய்யும் சிறு முயற்சிதான் இந்த முதியோன் செய்வது.

    தங்கள் கருத்தினைத் தயங்காது சொன்னதற்கு நன்றி.

    சுப்புரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. பாசமலர் வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
    நல்லதை நினையுங்கள். நல்லதை கேளுங்கள். நல்லதை சொல்லுங்கள்.
    நான்காவது நல்லதை எழுதுங்கள்.
    நீங்கள் நன்றாக எழுதுகிறீகள். எழுதும் திறன் ஒரு வரம்.
    அதைச் சிறப்பொடு செய்யின் உயர்கிறது சிரம்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. கண்மணி டீச்சர் பொருத்தமான தேர்வு.

    டீச்சருக்கு டீச்சரே ஆதரவு தெரிவிக்கலைன்னா எப்படி? :-))))

    அப்படி அவுங்க வேணவே வேணாமுன்னு சொல்லிட்டா அடுத்தா தலையைத் தேடும் சிரமம் உங்களுக்குத் தர வேணாம் என்ற நல்லெண்ணம் எனக்கிருக்கு:-))))

    எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து எழுதி இருக்கீங்க சுப்பு சார்.

    உங்களுக்கு ஒரு கிரீடம் சூட்டலாமான்னு இருக்கு.

    ஆமாம். நீங்கள் உங்க வலைப்பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்கலையா?

    இன்னும் பல கண்களுக்குப் போய்ச்சேரும் எளிய மேடையாச்சே அது.

    உங்களை நான் கூகுளில் போட்டுவச்சுருக்கேன்:-)

    ReplyDelete
  7. // துளசி கோபால் said...

    அப்படி அவுங்க வேணவே வேணாமுன்னு சொல்லிட்டா அடுத்தா தலையைத் தேடும் சிரமம் உங்களுக்குத் தர வேணாம் என்ற நல்லெண்ணம் எனக்கிருக்கு//

    நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தை தயாராக வைத்துக் கொண்டு,
    திருவேங்கடமும் ஹரியும் எப்ப வருவாங்கன்னு எதிர்பார்த்து இருக்கிறேன்.
    ஹூம் ! அதுக்குன்னு ஒரு நேரம் வரணும்லே..
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. ஜெயபாரதன் ஜெயிப்பார் என்று நினைத்தேன்,பரவாயில்லை கண்மணி பக்கம் போக வாய்ப்பு கொடுத்தீர்களே அதற்கு நன்றி.

    ReplyDelete
  9. சூரி சார் உடனடியா உங்க பதிவை தமிழ்மணத்துல இணைங்க.முகப்புல பதிவுகள் கிளிக்கி பட்டியலில் சேர்க்க கிளிக்கினால் உரல் குடுத்து விட்டு ஓரிரு நாளில் சேரலாம்.பின்னர் கருவிப்பட்டையும் சேர்த்தால்தால் மறுமொழியப் பட்ட இடுகையில் வரும்.
    நம் எழுத்துக்கள் நல்லவையோ கெட்டவையோ நாலு பேர் பார்க்கனும் இல்ல.இது குறித்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!